News April 9, 2024
திருவாரூர்:கூத்தாநல்லூரில் ரமலான் சிறப்பு தொழுகை

கூத்தாநல்லூர் அருகே உள்ள பொதக்குடி நோன்பு பெருநாள் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ரமலான் சிறப்பு தொழுகை (பிறை தெரிந்தவுடன்) பொதக்குடி நூரியா தெருவில் நூருல்லா நினைவு விளையாட்டு மைதானத்தில் காலை 7.15 மணிக்கும், சவுக்கத்தலி தெருவில் அமைந்துள்ள ஜன்னத்துல் பிர்தௌஸ் பள்ளிவாசலில் காலை 7 மணிக்கும், அப்துல்லா தெருவில் அமைந்துள்ள பாத்திமா பள்ளிவாசலில் காலை 6.45 மணிக்கும் நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.
Similar News
News December 10, 2025
திருவாரூர்: சொந்த தொழில் தொடங்க அறிய வாய்ப்பு!

திருவாரூரில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதற்கு <
News December 10, 2025
திருவாரூர்: கம்யூனிஸ்ட் கட்சியை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்

பாஜக IT WING மாநில செயலாளர் சதீஷ்குமார் முகநூலில் திருப்பரங்குன்றம் சம்பந்தமாக பதிவிட்ட பதிவிற்காக கம்யூனிஸ்ட் கட்சியினர், அவரின் அலுவலகத்தில் புகுந்து தாக்க முற்பட்டதாகவு; இது தொடர்பாக பேரளம் காவல் நிலையத்தில் புகார் அளித்து அவர்களின் மீது வழக்கு பதிந்தும் இதுவரை கைது செய்யாமல் காவல்துறையினர் உள்ளதாகவும் கூறி, இன்று பேரளம் கடைதெருவில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
News December 10, 2025
திருவாரூர்: சோழ சாம்ராஜ்யத்தின் மணிமகுடம்!

தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம் என அனைவராலும் அறியப்படும் காவிரி ஆற்றின் டெல்டா பகுதியில் அமைந்திருக்கும் திருவாரூர் மாவட்டம், சோழ சாம்ராஜ்யத்தின் 5 பாரம்பரிய தலைநகரங்களில் ஒன்றாக இருந்துள்ளது. முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் திருவாரூர் தலைநகரமாகவும், தியாகராஜர் கோயிலின் இருப்பிடமாக இருப்பதால், சைவ வளர்ச்சி மையமாகவும் திகழ்ந்துள்ளது. இதனால் திருவாரூர் சோழ சாம்ராஜ்யத்தின் மணிமகுடமாக விளங்கியது.


