News October 7, 2024
திருவாரூரில் இரவு ரோந்துப் பணி காவல் துறையினர் விவரம்

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (07.10.24 ) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணி மேற்கொள்ளும் அதிகாரிகளின் விபரம் மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் குற்ற சம்பவங்களைத் தடுக்கும் வகையில் நடைபெறும் இந்த ரோந்து பணிகளில், பொதுமக்கள் அவசர உதவிக்கு இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம்.
Similar News
News November 8, 2025
திருவாரூர்: இலவச போர்க்லிப்ட் ஆபரேட்டர் பயிற்சி

திருவாரூர் மாவட்டம் தாட்கோ வழங்கும் இலவச போர்க்லிப்ட் ஆபரேட்டர் பயிற்சி, தமிழ்நாடு ஆதிதிராவிடர் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்காக பயிற்சி 1 மாதம் வழங்கப்படுகிறது. இதற்கு தகுதி 10ஆம் வகுப்பு தேர்ச்சி, வயது 18 முதல் 35, வருமானம் ஆண்டுக்கு ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 8, 2025
திருவாரூர்: மாட்டுக் கொட்டகை அமைக்க ரூ.2.10 லட்சம்!

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், செயல்படுத்தப்படும் இலவச மாட்டுக் கொட்டகை அமைக்கும் திட்டத்தில் மாட்டு கொட்டகை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. அதில் 4 மாடுகள் வரை வைத்திருந்தால் ரூ.79,000-மும், 5 முதல் 10 மாடுகள் வரை இருந்தால் ரூ.2.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்புவோர் உங்கள் பகுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க. (<<18233174>>பாகம்-2<<>>)
News November 8, 2025
திருவாரூர்: மாட்டுக் கொட்டகை அமைக்க ரூ.2.10 லட்சம் (2/2)

▶️கொட்டகை அமைக்க சொந்த இடம் இருக்க வேண்டும்.
▶️ ஏற்கெனவே மாடு வளர்த்து வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
▶️ ஆவின் நிறுவனத்திற்கு அதிகளவில் பால் விநியோகம் செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
▶️ ஆடு கொட்டகை, கோழிக்கூண்டு மானியத் திட்டங்களில் பயன்பெற்றிருக்க கூடாது.
▶️ விண்ணதாரர் 100 நாள் வேலை திட்டத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும்.
▶️ இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க..


