News November 3, 2025

திருவள்ளூர்: வெளிநாடு செல்ல ஆசையாய் இருந்தவருக்கு விபூதி

image

ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியை சேர்ந்தவர் சேரலாதன் (29). இவர், ஆவடி அடுத்த சேக்காடு பகுதியில் ஏஜென்சி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரிடம் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியை சேர்ந்த ஆகாஷ் (26) என்பவர் துபாய் செல்வதற்காக விசா வாங்கி தருமாறு கேட்டார். இதற்காக சேரலாதனிடம் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் கொடுத்துள்ளார். இந்நிலையில், போலியான வீசா தந்ததால் சேரலாதன் கைது செய்யப்பட்டார்.

Similar News

News November 8, 2025

திருவள்ளூரில் இன்று ரோந்து காவலர்களின் விபரம்

image

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (8.11.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதிசெய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.

News November 8, 2025

திருவள்ளூர்: பெண்களே நிலம் வாங்கினால் ரூ.5 லட்சம் மானியம்!

image

பெண்களை நில உடைமையாளர்களாக மாற்றும் வகையில் தாட்கோ மூலமாக நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்கள் விவசாய நிலம் வாங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை மானியம் பெறலாம். அதேபோல், முத்திரைத்தாள், பதிவு கட்டணத்தில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படும். இதில் பயனடைய விரும்பும் பெண்கள் <>இங்கு க்ளிக்<<>> செய்து மேலும் விவரங்களை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News November 8, 2025

திருவள்ளூர்: குளத்தில் மூழ்கி ஒன்றரை வயது குழந்தை பலி!

image

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஏனாதிமேல்பாக்கம் ஊராட்சி சோழியம்பாக்கத்தை சேர்ந்த சேது-சங்கீதா தம்பதியரின் ஒன்றரை வயது குழந்தை தர்ஷினி. இன்று காலை குழந்தை தர்ஷினி வீட்டில் யாரும் கவனிக்காத போது அருகில் இருந்த குளத்தில் இறங்கி, நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!