News November 17, 2024
திருவள்ளூர் மாவட்டத்தில் மழை பதிவு நிலவரம்

திருவள்ளூர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மழை பெய்தது. நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை திருவள்ளுர் 10 மி. மீ, கும்மிடிப்பூண்டி 21 மி. மீ, பொன்னேரி 11 மி. மீ, செங்குன்றம் 5 மி. மீ, பூண்டி 5 மி. மீ, திருவாலங்காடு 10 மி. மீ, திருத்தணி 46 மி. மீ, ஊத்துக்கோட்டை 6 மி. மீ, பூந்தமல்லி 0, சோழவரம் 8 மி. மீ, தாமரைப்பாக்கம் 6 மி. மீ ஆகிய பகுதிகளில் மழை பதிவாகியுள்ளது.
Similar News
News December 15, 2025
திருவள்ளூர்: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (டிச.15) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு, அதற்கு தீர்வுக்கான சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் உத்திரவிட்டார். உடன் மாவட்ட வருவாய், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஆகியோர் உள்ளனர்.
News December 15, 2025
மக்கள் குறைதீர் கூட்டத்தில் 433 மனுக்கள்!

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (டிச.15) நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் நிலம் சம்பந்தமாக 145, சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 88, வேலைவாய்ப்பு வேண்டி 74, பசுமைவீடு, அடிப்படை வசதிகள் வேண்டி 24, இதர துறைகள் சார்பாக 102 என மொத்தம் 433 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும், அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிடவும் ஆட்சியர் அறிவுறுத்தினார்.
News December 15, 2025
தூய்மை பணியாளர்களுக்கான குறை தீர்ப்பு கூட்டம்!

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (டிச.15) தூய்மை பணியாளர்களுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் தூய்மை பணியாளர்கள் தங்களின் பணிநிலை, சம்பளம், பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்ட கோரிக்கைகளை மனுக்களாக வழங்கினர். பெறப்பட்ட மனுக்களை உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.


