News September 29, 2025
திருவள்ளூர்: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு…

திருவள்ளூர் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். Mparivahan என்ற அரசு செயலியில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை இணைத்தால், காவலர்கள் அதை உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க
Similar News
News November 12, 2025
திருவள்ளூர் காவல் அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம்!

திருவள்ளூர் மாவட்டம் காவல் அலுவலகத்தில் இன்று (12.11.2025) பொதுமக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா பொதுமக்களின் குறைகளை நேரடியாக கேட்டு அறிந்ததுடன், தேவையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். ஏராளமான பொதுமக்கள் இதில் பயனடைந்தனர்.
News November 12, 2025
திருவள்ளூர்: தேர்வு, நேர்காணல் இல்லாமல் மத்திய அரசு வேலை

India Post Payments Bank-ல் ஜூனியர் ஆசோசியட், அசிஸ்டண்ட் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் இந்தியா முழுவதும் 309 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு, பட்டப்படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு 20 முதல் 35 வயதுடையவர்கள்,<
News November 12, 2025
திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் கவனத்திற்கு!

திருவள்ளுர் மாவட்டத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் வருவாய் கோட்ட அளவில் வரும் நவ.14ஆம் தேதியன்று காலை 10.00 மணிக்கு திருவள்ளுர், திருத்தணி மற்றும் பொன்னேரி ஆகிய வருவாய் கோட்ட அலுவலகங்களில் சார் ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில் நடத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிரதாப் உத்தரவிட்டுள்ளார்.


