News November 26, 2025

திருவள்ளூர்: பெண்ணிற்கு கத்திக் குத்து!

image

பூந்தமல்லி, பி.ஜி.பி நகரைச் சேர்ந்தவர் கன்னியம்மாள்(38). நேற்று முன் தினம் மப்பேடு அருகே உள்ள விஸ்வநாதபுரம் பகுதியில் உள்ளது தனது அக்கா ஜெயலட்சுமியை பார்ப்பதற்கு சென்றார். அப்போது ஜெயலட்சுமிக்கும் அவரது கணவர் பாலாஜிக்கும் தகராறு ஏற்பட்டது. இதில், கன்னியம்மாளை, பாலாஜி கத்தியால் குத்தினார். காயமடைந்த அவர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News January 24, 2026

திருவள்ளூர் மக்களுக்கு ரூ.10 லட்சம்! CLICK NOW

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., நீங்கள் புதிதாக தொழில் தொடங்க மத்திய அரசின் ‘முத்ரா தொழில் கடன்’ மூலம் ரூ.10 லட்சம் பெற முடியும். இதற்கு தேவையான ஆவணங்களுடன் அருகே உள்ள முத்ரா கடன் தரும் வங்கியை அணுகவும். அங்கு முத்ரா கடன் பெறுவதற்கான விண்ணத்தைப் பெற்று, உங்கள் தேவையான தொகை, விவரங்களை எழுதி சமர்ப்பிக்கவும். ஒரு மாதத்திற்குள் உங்களுக்கான தொகை வங்கிக் கணக்கிலேயே டெபாசிட் செய்யப்படும். (SHARE IT)

News January 24, 2026

திருவள்ளூரில் கழுத்தை அறுத்த காதலன்!

image

விருதுநகரைச் சேர்ந்தவர் தங்க மாரியப்பன்(38). இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். இவருக்கும் திருநின்றவூர் பகுதியில் உள்ள ஓர் பெண்ணிற்கும் திருமணம் மீறிய உறவு இருந்துள்ளது. இந்நிலையில், அப்பெண் வேறு பல ஆண்களுடன் செல்போனில் பேசியதால் ஆத்திரமடைந்த மாரியப்பன், அவரின் கழுத்தை அறுத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அப்பெண், தாயை சிகிச்சைக்கு அனுமதித்து, மாரியப்பனை கைது செய்தனர்.

News January 24, 2026

திருவேற்காடு: மாணவர்களிடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

image

ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் 37-வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு (23.01.2026) திருவேற்காடு சிந்தி கல்லூரியில் போக்குவரத்து காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நடைபெற்றது. இதில் சாலை விதிகள் மற்றும் விபத்தில்லா பயணம் குறித்து மாணவர்களுக்கும், பட்டாபிராம், எண்ணூர் தொழிற்சாலை பணியாளர்களுக்கும் எடுத்துரைக்கப்பட்டது.

error: Content is protected !!