News November 19, 2025
திருவள்ளூர் கலெக்டர் அறிவித்தார்!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு குடிமைப் பணிகளுக்கான போட்டித் தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக பிரத்யேக பயிற்சி அளித்திடும் திட்டத்தினை செயல்பட உள்ளது. இத்திட்டத்தில் பயிற்சி பெற விரும்புவோர் www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, 044-2797 2457-ஐ தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 13, 2026
திருவள்ளூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு…

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், திருவள்ளூரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழக (TASMAC) மதுபான சில்லறை கடைகள் (F.L-1) மற்றும் F.L-2 / F.L-3 வகை மதுபான உரிமம் பெற்ற கடைகள், (ஜன.16) மற்றும் (ஜன.26) ஆகிய தினங்களில் முழுமையாக மூடப்படும் என தெரிவித்தார். மேலும் உத்தரவை மீறினால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News January 13, 2026
திருவள்ளூரில் இனி எதற்கும் அலைய வேண்டாம்!

ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், பான் கார்டு, வோட்டர் ஐடி ஆகியவற்றை விண்ணப்பிக்க அரசு அலுவலகங்களுக்கு செல்கிறீர்களா? இனி அவ்வாறு சென்று அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணப்பிக்கலாம். <
News January 13, 2026
திருவள்ளூர் கலெக்டர் வழங்கினார்!

திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில், ஊரக வளர்ச்சி அலகில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வாயிலாக நடைபெற்ற தொகுதி IV தேர்வில் தேர்ச்சி பெற்று நியமனம் செய்யப்பட்ட 15 இளநிலை உதவியாளர்களுக்கு, நேற்று(ஜன.12) மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப் இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கான பணிநியமன ஆணைகளை வழங்கினார்.


