News November 28, 2024

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரங்கள் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

Similar News

News November 11, 2025

திருவள்ளூர்: இளைஞர் துடிதுடித்து பலி!

image

திருவள்ளூர்: ஆர்.கே பேட்டை தாலுகா, ராஜாநகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபி(25). இவர் ஆந்திரா மாநிலம், தடாவில் உள்ள நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிகிறார்.நேற்று முன் தினம் இரவு பணி முடிந்து சரக்கு வேனில் திருத்தணி நோக்கி வந்துகொண்டிருந்தார். கனகம்மாசத்திரம் அருகே வந்தபோது முன்னால் சென்ற லாரி மீது சரக்கு வாகனம் மோதியதில் கோபி படுகாயமடைந்து, பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News November 11, 2025

திருவள்ளூர்: இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

image

திருவள்ளூர்: லக்காஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் யுவராஜ்(5). வெல்டர் வேலை செய்து வருகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் இவருக்கும் சுவாதி(20) என்பவருக்கும் காதல் திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதிக்கு 7 மாத ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில், யுவராஜ் அடிக்கடி மது அருந்தி வீட்டுக்கு வருவதால் எழுந்த தகராறால், சுவாதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து ஆர்டிஓ விசாரணை மேற்கொண்டுள்ளார்.

News November 11, 2025

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

திருவள்ளுர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் TNPSC Group-II / IIA முதன்மை போட்டி தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் (நவ-12) அன்று முதல் காலை 10.30 மணிக்கு தொடங்கப்படவுள்ளது. மேலும் விவரங்களுக்கு 8489866698, 9626456509 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பயனடையுமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!