News October 17, 2025
திருவள்ளூர்: இனி EB ஆபீஸ் போகத் தேவையில்லை!

திருவள்ளூர் மக்களே, அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, செல்போனில் இங்கே <
Similar News
News November 15, 2025
செங்குன்றம்: கஞ்சா கடத்திய மூவர் கைது!

செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார், சோழவரம் மொண்டியம்மன் நகர் சோதனை சாவடியில் நேற்று(நவ.14) வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஒரே பைக்கில் வந்த மூவரை பிடித்து, சோதனை செய்ததில் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரிந்தது. இதையடுத்து, சிவகங்கை அமரன் சூர்யா(28) துாத்துக்குடி பாலாஜி(26) ராமநாதபுரம் பூவலிங்கம்(29) ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
News November 15, 2025
திருவள்ளூர்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

திருவள்ளூர் மாவட்டத்தில் (14.11.2025) இரவு ரோந்து பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் விவரம் காவல் நிலையம் வாரியாக மக்களுக்கு எளிய தொடர்புக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர உதவி, பாதுகாப்பு, குற்றநிகழ்வுகள் தடுப்பு மற்றும் ரோந்து சம்பந்தமான தகவல்களை பெற இந்த விவரங்களை பயன்படுத்தலாம். இது மக்கள் பாதுகாப்பையும், போலீஸ் சேவையை மேம்படுத்தும் முயற்சியாகும்.
News November 14, 2025
ஆவடி பகுதியில் மருத்துவ முகாம் அறிவிப்பு

ஆவடி மாநகராட்சியில் முதல்வர் “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம் நாளை (நவ.15) பட்டாபிராம் சத்திரம் உயர் நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. பொதுமக்களின் நலனை முன்னிட்டு 17 துறைகளில் 43 மருத்துவ சேவைகள் வழங்கப்பட உள்ளன. முகாம் மூலம் தேவையான சிகிச்சைகளை இலவசமாக பெற அனைவரும் பயன்படுத்திக்கொள்ளுமாறு மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.


