News October 1, 2025
திருவள்ளூர்: இனி லைன்மேனை தேடி அலையாதீங்க!

திருவள்ளூர் மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News December 12, 2025
திருவள்ளூர்: மணமகளுக்கு ரூ.25,000 சூப்பர் திட்டம்!

திருவள்ளூர் மக்களே.. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவுத் திருமண உதவித் திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 10ம் வகுப்பு படித்த மணமகளுக்கு ரூ.25,000 நிதியுதவி மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. இது, பொருளாதார ரீதியாக பின்தங்கிய பெற்றோர் தங்கள் மகளுக்கு திருமணம் நடத்தும் பொழுது மிகுந்த உதவியாக அமைகிறது. மேலும் மாவட்ட சமூக நல அலுவலகம் அல்லது இ-சேவை மையம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
News December 12, 2025
பொன்னேரி: முடிதிருத்தம் தொழிலார்கள் முற்றுகை

திருவள்ளூர்: பொன்னேரி நகராட்சியில் பணிபுரியும் வருவாய் ஆய்வாளர் கோபிநாத் அடாவடி வசூல் செய்வதாகவும், தொழில் வரி வசூல் செய்வதில் முடி திருத்தம் செய்யும் தொழிலாளர்களை மிரட்டுவதாகவும் கூறி, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று(டிச்.12) 50க்கும் மேற்பட்டோர் பொன்னேரி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
News December 12, 2025
திருவள்ளூர்: வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (டிச.13) மற்றும் நாளை மறுநாள் (டிச.14) ஆகிய இரண்டு நாட்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தங்கள் குறித்து சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு படிவங்களை பூர்த்தி செய்து வழங்கிட வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


