News March 23, 2024

திருவள்ளூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்.19 ஆம் தேதி நடைபெறுகிறது. திருவள்ளூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், தபால் ஓட்டு போட வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார். இதற்கான விண்ணப்ப படிவம் ’12 டி’ ஐ பூர்த்தி செய்து அந்தந்த தொகுதிக்குட்பட்ட உதவி தேர்தல் அலுவலரிடம் மார்ச் 25ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தி உள்ளார்.

Similar News

News November 17, 2025

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் விவரம் காவல் நிலையம் வாரியாக மக்களுக்கு எளிய தொடர்புக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர உதவி, பாதுகாப்பு, குற்றநிகழ்வுகள் தடுப்பு மற்றும் ரோந்து சம்பந்தமான தகவல்களை பெற இந்த விவரங்களை பயன்படுத்தலாம். வேலைக்கு செல்லும் தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க

News November 16, 2025

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் விவரம் காவல் நிலையம் வாரியாக மக்களுக்கு எளிய தொடர்புக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர உதவி, பாதுகாப்பு, குற்றநிகழ்வுகள் தடுப்பு மற்றும் ரோந்து சம்பந்தமான தகவல்களை பெற இந்த விவரங்களை பயன்படுத்தலாம். வேலைக்கு செல்லும் தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க

News November 16, 2025

கார் பார்க்கிங் செய்யும் போது நேர்ந்த சோகம்

image

ஆவடியில் வீட்டின் பார்க்கின் பகுதியில் கணவரின் கவனமின்மையால் கார் மோதி அவருடைய மனைவி இந்துமதி என்பவர் உயிரிழந்தார். காருக்கு ரிவர்ஸ் பார்க்க சென்ற போது காருக்கும், சுவருக்கும் இடையில் மாட்டிக்கொண்டு படுகாயம் அடைந்த மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!