News August 21, 2024

திருவள்ளூரில் 1,500 பேருக்கு வேலை வாய்ப்பு

image

தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இன்று திறந்து வைத்தார். அதில், ஹாரிசன் டெவலப்பர்ஸ் நிறுவனம் (Horizon Developers) திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.200 கோடி முதலீடு செய்துள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் 1,500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ரூ.125 கோடி முதலீட்டில் ஆம்ரோன் (Omron) ஹெல்த் கேர் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

Similar News

News January 17, 2026

திருவள்ளூர்: ஹோட்டல் சாப்பாட்டில் குறைபாடா? CLICK HERE

image

தமிழகத்தில் உணவுப் பாதுகாப்புத் துறை தீவிர சோதனை நடத்தினாலும், தரமற்ற மற்றும் கலப்பட உணவு குறித்த புகார்கள் தொடர்கின்றன. ஹோட்டல்களில் சுகாதாரம் இன்றி உணவு வழங்கப்பட்டால், பொதுமக்கள் உடனடியாக 94440 42322 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு புகார் அளிக்கலாம். உங்கள் புகார்களைப் புகைப்பட ஆதாரத்துடன் சமர்ப்பித்துத் தீர்வு பெறலாம். மேலும், மக்களிடையே இந்த விழிப்புணர்வு தகவலைப் பகிருங்கள்!

News January 17, 2026

திருவள்ளூர்: கொத்தடிமைகளாக இருந்த 24 பேர் மீட்பு

image

திருவள்ளூர் அடுத்த கண்ணூர் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்த 24 பேர் இன்று (ஜன.17) மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட 24 பேரும் தங்களது சொந்த மாநிலமான சத்தீஸ்கருக்கு அனுப்பி வைக்கப்படுவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் இணைந்து செய்துள்ளனர்.

News January 17, 2026

மாணவர்களுக்கு பயிற்சிப்பட்டறை நடத்தும் எம்பி

image

தேர்வுகளில் எளிதாக வெற்றி பெறுவது எப்படி? என்ற பயிற்சிப்பட்டறை திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் மாணவர்களுக்கு வரும் 25 ஆம் தேதி நடத்த உள்ளார். இதற்குமுன் பதிவு செய்வதற்காக மேல் உள்ள க்யூ ஆர் யை ஸ்கேன் செய்ய வேண்டும். மேலும் தகவலுக்கு தொடர்பு கொள்ள: 9445500346 என்ற தொலைபேசி எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!