News August 4, 2024
திருவள்ளூரில் பலத்த காற்றுடன் மழை

தமிழகத்தில் இரவு 7 மணிக்குள் திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 29 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் தற்போது மணவாளநகர், ஊத்துக்கோட்டை, பூண்டி, புட்லூர், வேப்பம்பட்டு, செவ்வாப்பேட்டை, கடம்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காற்றுடன் மழை பெய்து வருகிறது.
Similar News
News January 18, 2026
திருவள்ளூர்: பாம்பு கடித்ததில் முதியவர் பலி!

திருவள்ளூர், கடம்பத்தூர், செஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவர் துரைசாமி (54). இவர் வாத்துகளை வளர்த்து வருகிறார். கடந்த 13-ந் தேதியன்று வாத்துகளை அங்குள்ள வயலில் மேய்ச்சலுக்கு ஓட்டி சென்ற போது, விஷ பாம்பு ஒன்று அவரை கடித்தது. சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். கடம்பத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 18, 2026
ஆவடி: எரிந்து நாசமான டூவீலர்கள்!

திருவள்ளூர், ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு சாலையில், சுரேஷ் என்பவர் இருசக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். பொங்கலை முன்னிட்டு, கடந்த 13ம் தேதி முதல் கடை மூடப்பட்டு இருந்தது. இந்நிலையில், கடை முன் சர்வீஸ் செய்ய நிறுத்தப்பட்டு இருந்த, இரண்டு ஸ்கூட்டர்கள் நேற்று திடீரென தீப்பற்றி எரிந்து நாசமாகின. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 18, 2026
திருவள்ளூர்: ராட்சத அலையில் சிக்கிய டிரைவர் பலி!

சோழவரம், ஆங்காடு கிராமத்தை சேர்ந்தவர் அஜித் குமார் (30). டிரைவராக உள்ளார். நேற்று காணும் பொங்கலையொட்டி காட்டுப்பள்ளி கடற்கரை பகுதிக்கு சென்றார். அங்கு அவர் குளிப்பதற்காக கடலில் இறங்கிய போது ராட்சத அலையில் சிக்கி இழுத்துச்செல்லப்பட்ட அஜித்குமார், பரிதாபமாக பலியானார். கரை ஒதுங்கிய அஜித்குமாரின் உடலை காட்டூர் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


