News August 20, 2024
திருவள்ளூரில் ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்

சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரியில் 2,479 மில்லியன் கன அடி தண்ணீரும், சோழவரம் ஏரியில் 84 மில்லியன் கன அடி தண்ணீரும் செம்பரம்பாக்கம் ஏரியில் 1,390 மில்லியன் கன அடி தண்ணீரும், பூண்டி ஏரியில் 107 மில்லியன் கன அடி தண்ணீரும், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் 305 மில்லியன் கன அடி தண்ணீரும் இருப்பில் உள்ளது என இன்று (ஆக.20) காலை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News January 15, 2026
திருவள்ளூர் எம்பி பொங்கல் வாழ்த்து

பொங்கல் திருநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் திருவள்ளூர் எம்பி சசிகாந்த் செந்தில் வெளியிட்டுள்ள செய்தியில் உலகெங்கிலும் வாழும் தமிழர்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் என தெரிவித்துள். இந்த தமிழர் திருநாளில், அனைத்து விவசாயிகளின் வாழ்வில் நம்பிக்கையும் வளமும் பொங்கிப் பெருகட்டும் எனவும் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
News January 15, 2026
திருவள்ளூர் மாவட்ட காவல் துறை பொங்கல் வாழ்த்து

தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பில் பொதுமக்களுக்கு சமூக வலைத்தள பக்கத்தில் பொங்கல் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் திருவள்ளூர் மாவட்ட கண்காணிப்பாளர் விவேகானந் வாழ்த்து தெரிவித்துள்ளார். பொங்கலை சிறப்பாக கொண்டாடி மகிழவும் அறிவுறுத்தி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
News January 15, 2026
திருவள்ளூர்: பொங்கல் அன்று மின்தடையா?

பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தின் போது தடையற்ற மின்சாரம் வழங்க காஞ்சிபுரம் மின்சார வாரியம் உறுதி பூண்டுள்ளது. ஒருவேளை மின் தடை ஏற்பட்டால் லைன்மேனைத் தேடி நீங்கள் அலைய வேண்டாம். 94987 94987 என்ற எண்ணிற்கு அழைத்து உங்கள் மின் இணைப்பு எண்ணைக் கூறினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன்மேன் உங்கள் பிரச்னையை சரிசெய்வார். பொங்கல் ஒளிமயமாக அமைய மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.


