News August 4, 2024
திருவள்ளூரில் அதிகபட்சமாக 4 செ.மீ மழை கொட்டி தீர்த்தது

திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் நேற்று மாலை திடீரென காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்நிலையில் திருத்தணி, கும்மிடிப்பூண்டி, ஆர்கே பேட்டை, பள்ளிப்பட்டு, திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, செங்குன்றம் உள்ளிட்ட பல இடங்களில் மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக திருவள்ளூரில் 4 சென்டிமீட்டர் மழை பெய்தது. இதனால் திருவள்ளூரில் வெப்பம் தணிந்து காணப்படுகிறது.
Similar News
News January 19, 2026
திருவள்ளூர் மக்களே கட்டாயமா தெரிஞ்சிக்கோங்க

திருவள்ளூர் மாவட்ட பொதுமக்கள், தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை ‘<
News January 19, 2026
திருவள்ளூர்: செவிலியர் துறையில் 999 பணியிடங்கள் APPLY NOW

தமிழ்நாடு சுகாதார துறையில், செவிலியர் உதவியாளர் (தரம்-2) 999 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th & Nursing Assistants Course முடித்திருந்தால் போதும். மாத சம்பளம் ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் பிப்.08-க்குள் இங்கு <
News January 19, 2026
திருவள்ளூரில் கிராம சபைக் கூட்டம்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் (ஜன.26) குடியரசு தினத்தை முன்னிட்டு அன்று காலை 11 மணிக்கு கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வாக்காளர்களும் கலந்து கொண்டு அரசால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிரதாப் தெரிவித்தார்.


