News April 3, 2025
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் புதிய பாடப்பிரிவுகள்

வேலூர் காட்பாடி அடுத்த திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தில் 3 புதிய பாடப் பிரிவுகள் கொண்டுவரப் பட்டுள்ளன.வரும் கல்வியாண்டு (2025-26) முதல் புதியதாக 3 துறைகள் (1) உயிரிவேதியியல், (2) எம்.பி.ஏ. (3.) நூலக அறிவியல் போன்ற முதுகலை பட்டய படிப்புகள் கொண்டுவரப்பட்டுள்ளன என துணை வேந்தர் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 22, 2026
வேலூர்: 15 லட்சம் மோசடி செய்த கேடி லேடி!

அரசமரபேட்டையை சேர்ந்த 65 வயது பூக்கடை வியாபாரியிடம் அப்பகுதி வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரியும் பெண், ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறி உள்ளார். இதை நம்பிய வியாபாரி கடந்த செப்டம்பர் மாதம் ரூ.15 லட்சத்தை அப்பெண்ணிடம் கொடுத்துள்ளார். ஆனால் இதுவரை எந்த லாபமும் கிடைக்காததால் தனது பணத்தை மீட்டு தருமாறு போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் புகார் அளித்துள்ளார்.
News January 22, 2026
வேலூரில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து

கே.வி.குப்பம் அருகே பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று (ஜன.21) காலை திடீரென கார் ஒன்று பழுதடைந்து. அப்போது பின்னால் வந்த பைக் கார் மீது மோதியது. இதனால் பின்னால் வந்த காரை டிரைவர் நிறுத்த முயன்றார். உடனே பின்னால் வந்த லாரி டிரைவர் பைக் மீது மோதாமலிருக்க பிரேக் போட்டுள்ளார். இதனால் லாரியின் பின்னால் வந்த தனியார் பஸ், லாரி மீது மோதியது. நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் ஏதும் நிகழவில்லை.
News January 22, 2026
வேலூரில் 22 சரவன் நகை திருட்டு – தீவிர விசாரணை

வேலூர் கொல்லைமேட்டை சேர்ந்த பெண் எஸ்பி அலுவலகத்தில் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, நான் தையல் கடை வைத்து நடத்தி வருகிறேன். எனது கணவர் பழ வியாபாரம் செய்து வருகிறார். கடந்தாண்டு என் வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 22 1/2 பவுன் நகை திருட்டு போனது. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் எஸ்பி நடவடிக்கை எடுத்து நகையை மீட்டுத் தர வேண்டும் என்றார்.


