News August 22, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் வாகனங்கள் பொது ஏலம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் பொது விநியோகப் பொருட்கள் கடத்தலில் பறிமுதல் செய்யப்பட்ட ஆம்னி வேன், லாரி உள்ளிட்ட வாகனங்களும், வந்தவாசி உட்பட 9 வட்டாட்சியர்கள் பயன்படுத்திய பழைய ஜீப்புகளும் பொது ஏலத்தில் விடப்படுகின்றன. ஏலம் 9.9.2025 அன்று காலை 11 மணிக்கு திருவண்ணாமலை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறும் என கலெக்டர் க.தர்ப்பகராஜ் அறிவித்துள்ளார்.

Similar News

News January 20, 2026

தி.மலை: உங்கள் ரேஷன் அட்டை ரத்தாக வாய்ப்பு

image

ரேஷன் அட்டையில் உள்ள உறுப்பினர்கள் e-KYC அப்டேட் செய்யாவிட்டால், அந்த குறிப்பிட்ட உறுப்பினரின் பெயர் நீக்கப்படவோ அல்லது ரேஷன் அட்டை முடக்கப்படவோ வாய்ப்புள்ளது. போலி அட்டைகளைத் தவிர்க்க, உண்மையான பயனாளிகளைக் கண்டறிய உங்கள் ரேஷன் கடைக்கு நேரடியாக சென்று கைரேகை வைத்து அப்டேட் செய்யவேண்டும். இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அரசு உதவி எண் 1800 425 5901-ஐ அழைக்கலாம். உடனே இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

News January 20, 2026

தி.மலை: டூவீலர் ஃபைனை கேன்சல் செய்ய! (CLICK)

image

தி.மலை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். இங்கு <>கிளிக் செய்து<<>> உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை இணைத்தால், காவலர்கள் அதை உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க

News January 20, 2026

தி.மலை: 1,600 ஆண்டுகளுக்குப் பின் கும்பாபிஷேகம்

image

செங்கம் நகரில் சுமார் 1600 ஆண்டுகள் பழமையான அனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரர் கோவிலில், 28-ஆம் தேதி பிரம்மாண்ட கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட புனரமைப்புப் பணிகளுக்குப் பிறகு, தமிழக அரசு சார்பில் ரூ. 2 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நிறைவடைந்துள்ளன. உளுந்தூர்பேட்டை ராஜா குருக்கள் தலைமையில் 110 சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழக்கங்க கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

error: Content is protected !!