News May 2, 2024

திருவண்ணாமலை: திட்டமிட்டபடி ரயில் சேவை தொடங்கும்

image

திருவண்ணாமலை – சென்னை கடற்கரையில் ரயில் நிலையத்தில் இருந்து வேலூர் கன்டோன்மென்ட் வழியாக திருவண்ணாமலை வரை இன்று தொடங்க இருந்த ரயில் போக்குவரத்து ஒத்திவைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், திட்டமிட்டபடி இன்று திருவண்ணாமலைக்கு ரயில் போக்குவரத்து தொடங்கப்படும் என்று தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Similar News

News December 14, 2025

தி.மலை: கூட்டுறவு வங்கியில் வேலை- ரூ.96,200 சம்பளம்!

image

தி.மலை மக்களே, தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் 50 உதவியாளர்கள் பணிக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஏதேனும் டிகிரி முடித்து, 20 வயது பூர்த்தி அடைந்தவர்கள், வரும் டிச.31ம் தேதிக்குள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். மேலும், மாத சம்பளமாக ரூ.32,020 – ரூ.96,200 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உடனே பதிவு செய்து உங்கள் வேலையை உறுதி செய்யுங்கள். ஷேர் பண்ணுங்க!

News December 14, 2025

தி.மலை: டிராக்டர் மோதி பிளஸ்-2 மாணவர் பலி!

image

கீழ்பென்னாத்தூரை அடுத்த சிறுநாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த லோகேஷ்(17) பிளஸ்-2 படித்து வந்தார். இந்நிலையில், நாய்க்கடிக்கு ஊசி போட்டு விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். மாணவர் லோகேஷ் மீது அந்த வழியாக ஜல்லிக்கற்களை ஏற்றி கொண்டு வந்த ஒரு டிராக்டர் எதிர்பாராதவிதமாக லோகேஷ் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட லோகேஷ் பரிதாபங்க உயிரிழந்தார்.

News December 14, 2025

தி.மலை வரும் முதல்வர்!

image

திருவண்ணாமலையில் இன்று (டிசம்பர் 14) மாலை 5 மணி அளவில் தி.மு.க. இளைஞரணி நிர்வாகி கூட்டம் மற்றும் மண்டல அலுவலர் நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

error: Content is protected !!