News April 3, 2025
திருவண்ணாமலை சுற்று வட்டார பகுதிகளில் மழை

திருவண்ணாமலையில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், ஒருசில பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது. குன்னத்தூர், கமக்குர் பாளையம், காமக்கூர், சம்புவராயநல்லூர், அரியப்பாடி, சேவூர், அக்ராபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதிகாலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், தற்போது லேசாக பெய்து வரும் இந்த மழை வெப்பத்தை தனித்துள்ளது. உங்க ஏரியாவில் மழையா?
Similar News
News January 20, 2026
தி.மலை: சிலிண்டர் வெடித்து விபத்து; விரைந்த கலெக்டர்

மணலூர்பேட்டையில் பலூன் சிலிண்டர் வெடித்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார். மேலும், மருத்துவர்களிடம் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.
News January 20, 2026
அறிவித்தார் தி.மலை கலெக்டர்

திருவண்ணாமலையில் மாவட்ட அளவில் டிசம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் வருகிற 30-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் தலைமையில் நேரடியாக நடைபெற உள்ளது. இதில் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பங்கேற்று தங்கள் குறைகளை தெரிவிக்கலாம். அதிகாரிகள் நேரடியாக பதில் தர உள்ளனர். ஷேர் பண்ணுங்க.
News January 20, 2026
தி மலை: காவல்துறை இரவு ரொந்து பணி விவரம் வெளியீடு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.


