News April 13, 2024
திருமயத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா வருகை ரத்து

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று தேர்தல் பிரச்சாரத்துக்காக மதுரை வந்தார். முன்னதாக அவர் மதுரையிலிருந்து புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வந்து இங்குள்ள கோட்டை காலபைரவர் கோயில், சத்தியவாகீஸ்வரர் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நேற்று மாலை திருமயம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக மத்திய அமைச்சர் அமித்ஷாவின் திருமயம் வருகை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது.
Similar News
News November 9, 2025
புதுகை: டாஸ்மாக் கடைகளை மூட கலெக்டர் உத்தரவு!

புதுகை மாவட்டத்தில் நாளை (நவ.10) கீரனூர் அருகே களமாவூர் தனியார் பொறியியல் கல்லூரியில், தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்க உள்ளார். இதனை முன்னிட்டு, கீரனூர் மற்றும் அதன் சுற்றியுள்ள 5 டாஸ்மார்க் கடைகள், 2 மனமகிழ் மன்றம், மாத்தூரில் உள்ள ஒரு டாஸ்மார்க் மதுபான கடை மற்றும் மனமகிழ் மன்ற மதுபான கடை என மொத்தம் ஒன்பது கடைகளை மூட கலெக்டர் அருணா உத்தரவிட்டுள்ளார்.
News November 9, 2025
புதுகை: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

வாட்ஸ்அப் மூலமாக கேஸ் சிலிண்டர் புக் செய்வது மிகவும் எளிதான மற்றும் விரைவான வழியாகும். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களில் உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!
News November 9, 2025
புதுகை: புதிய தொழில் தொடங்க மானியத்துடன் கடன்

தமிழக அரசு சிறு தொழில் வளர்ச்சிக்கான மானியத்துடன் கூடிய ரூ.10 லட்சம் முதல் 5 கோடி வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் 25 % அல்லது 75 லட்சம் தமிழக அரசு மானியமாக வழங்குகிறது. இதற்கு 12th தேர்ச்சி பெற்ற, 21 வயது பூர்த்தியடைந்த புதிய தலைமுறை தொழில் முனைவோர் www.msme online.tn.gov.in/neets என்ற இணைய முகவரியில் விண்ணப்பித்து, அதனை மாவட்ட தொழில் மையத்தில் கொடுக்க வேண்டும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.


