News November 2, 2025

திருப்பூர்: 12வது போதும்.. ரூ.30,000 சம்பளம்

image

திருப்பூர் மக்களே, தமிழகத்தில் உள்ள நபார்டு வங்கியின் நிதி சேவை நிறுவனத்தில், வாடிக்கையாளர் சேவை அதிகாரி (Customer Service Officer – CSO) பணியிடங்கள் நிரப்ப உள்ளது. இதற்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாதம் ரூ.20,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க nabfins.org/Careers/ என்ற முகவரியில் அணுகலாம். கடைசி தேதி 15.11.2025 ஆகும். (SHARE)

Similar News

News December 9, 2025

திருப்பூரில் மின்தடை ஏற்படும் பகுதிகள்!

image

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, வரும் (டிச.11) காலை 9மணி முதல் மாலை 4 மணி வரை, அவிநாசிலிங்கம்பாளையம், அணைப்புதூர், தங்கம் கார்டன், பழங்கரை, விஸ்வாபாரதி நகர், தேவம்பாளையம், கவுண்டம்பாளையம், கைகாட்டிப்புதூர், குளத்துப்பாளையம், பெரியாயிபாளையம், பள்ளிபாளையம், வி.ஜி,வி நகர், திருநீலகண்ட வீதி, நெசவாளர் காலனி, கமிட்டியார் காலனி, வெங்கடாஜலபதி நகர், ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

News December 9, 2025

திருப்பூரில் ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி

image

திருப்பூர் மங்கலம் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ்(56). இவர் அந்த பகுதியில் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் வேலை காரணமாக வஞ்சிபாளையம் சோமனூர் இடையே தண்டவாளத்தை கடக்கும்போது, எதிர்பாராத விதமாக ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திருப்பூர் ரயில்வே போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 9, 2025

திருப்பூரில் இரவு ரோந்து போலீசார் விபரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். அவிநாசி பல்லடம் உடுமலைப்பேட்டை காங்கயம் தாராபுரம் ஆகிய பகுதிகளில் திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இன்று இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!