News November 19, 2025
திருப்பூர்: ரேஷன் கார்டு இருக்கா? இதை பண்ணுங்க

திருப்பூர் மக்களே; ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். (SHARE பண்ணுங்க)
Similar News
News January 23, 2026
சட்டமன்றத்தில் அதிமுக எம்எல்ஏ கவன ஈர்ப்பு தீர்மானம்

பெருந்துறை தொகுதி எம்எல்ஏ ஜெயக்குமார், குன்னத்தூரில் நிலவும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு குறித்து சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது, பொதுமக்களின் அவதியை போக்க அரசு இவ்விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, குடிநீர் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வை காண வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
News January 23, 2026
திருப்பூர் மக்களுக்கு முக்கிய தகவல்

திருப்பூர் மக்களே! சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் நமக்கு அரசின் திட்டங்களை பெற கட்டாயமாக தேவைப்படும் ஆவணங்கள். இது தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு சென்று அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே உங்கள் போனில் டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். <
News January 23, 2026
மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் எம்.பி. கே.சுப்பராயன் இக்கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் அதன் தற்போதைய நிலை குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.


