News October 10, 2025
திருப்பூர்: மனைவி கண்டித்ததால் கணவன் தற்கொலை

திருப்பத்தூர் மாவட்டம் வேலூர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன்(38). இவர் திருப்பூர் ராதா நகர் பகுதியில் குடும்பத்துடன் தங்கி தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் முருகேசன் ஆன்லைனில் கடன் பெற்றதால் மனைவி கண்டித்துள்ளார். இதனால் விரக்தியடைந்த முருகேசன் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 17, 2025
திருப்பூர்: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

பெண் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு<
News November 17, 2025
திருப்பூர்: பொருட்களை வாங்கும் முன் இத தெரிஞ்சிக்கோங்க

கடையில் வாங்கிய பொருட்களை உரிமையாளர் மாற்றி தரவோ (அ) பணத்தை திரும்ப தரவில்லை என்றாலோ நுகவோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புகார் அளிக்கலாம். வாங்கிய பொருட்களை 15 நாட்களுக்குள் எந்தவித சேதாரமும் இல்லாமல், வாங்கிய போது உள்ள நிலையில் இருந்தால் அதை கண்டிப்பாக மாற்றியோ (அ) பணத்தை திரும்ப தரவோ வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரை (044-28589055) தொடர்பு கொள்ளலாம்.ஷேர் பண்ணுங்க
News November 17, 2025
திருப்பூரில் இரவு நேர ரோந்து பணியில் காவலர்கள்

திருப்பூர் மாநகரில் சட்ட ஒழுங்கை பாதுகாக்கவும் இரவு நேரத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் இரவு நேர ரோந்து பணியில் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்றைய தினம் திருப்பூர் மாநகரில் உதவி ஆணையர் ஜெயபாலன் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபடக்கூடிய காவலர்கள் குறித்த விவரம் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


