News August 22, 2025
திருப்பூர் மக்களே முற்றிலும் இலவசம்!

திருப்பூரில் கனரா வங்கி கிராமப்புற சுய வேலைய வாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பாக, காளான் வளர்ப்பு (ம) அதன் மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரிப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் சூப், பிரியாணி, பிஸ்கட் தயாரிப்பு உள்ளிட்ட பயிற்சிகளும் வழங்கப்படுகிறது. பயிற்சி, சீருடை, உணவு, அனைத்தும் இலவசம். பயிற்சி முடிவில் அரசு சான்றிதழும் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு 9489043923 என்ற எண்னை அழைக்கவும். SHAREit
Similar News
News January 17, 2026
திருப்பூர்: கேஸ் சிலிண்டர் பயனாளர்கள் கவனத்திற்கு!

கேஸ் சிலிண்டருக்கு மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மேலும், UMANG என்ற App மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்.
News January 17, 2026
திருப்பூரில் வசமாக சிக்கிய இருவர்: அதிரடி கைது

திருப்பூர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோல்டன் நகர் மற்றும் மங்களம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுல்தான்பேட்டை ஆகிய பகுதிகளில், சட்டவிரோத மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் அப்பகுதிகளில் சோதனை மேற்கொண்ட போலீசார், பிச்சைமணி மற்றும் பாரதிதாசன் ஆகியோரை கைது செய்து, 56 மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.
News January 17, 2026
திருப்பூர்: அரசு சேவைகள் இனி உங்கள் வாட்ஸ்அப்பில்!

திருப்பூர் மக்களே பிறப்பு/இறப்பு சான்றிதழ், வருமான சான்று, பட்டா, சொத்துவரி, வேளான் திட்டங்கள்,மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் மின்சாரக் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை இனி வாட்ஸ்அப் மூலமாகவே பொதுமக்கள் எளிதாகப் பெறலாம். இதற்காகத் தமிழக அரசு 7845252525 என்ற பிரத்யேக வாட்ஸ்அப் எண்ணிற்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்பினால் போதும். இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!


