News March 27, 2024

திருப்பூர்: நாயை அடித்துக்கொன்ற கஞ்சா ஆசாமி

image

திருப்பூர்: மதுரையைச் சேர்ந்தவர் தஸ்தகீர்(40). அவிநாசி, வேலாயுதம்பாளையத்தில், நேற்று முன்தினம், கஞ்சா போதையில் தெருநாயை பிடித்து, பின்னங்கால்களை கட்டி, கட்டையால் கடுமையாக தாக்கினார். இதில் நாய் பரிதாபமாக உயிரிழந்தது. இது தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியது. இதுகுறித்த புகாரன்பேரில் அவிநாசி போலீசார், இறந்த நாயின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, தஸ்தகீரை கைது செய்தனர்.

Similar News

News January 20, 2026

திருப்பூரில் வசமாக சிக்கிய நால்வர்: அதிரடி கைது

image

திருப்பூர் ஆத்துப்பாளையம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்ற தமிழ்ச்செல்வன், யுவராஜ், தணிகாச்சலம் மற்றும் பிரசாத் ஆகிய நால்வரை 15 வேலம்பாளையம் போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்கள் போதை ஊசி பயன்படுத்தியதுடன், விற்பனையிலும் ஈடுபட்டது உறுதியானதால், போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களைக் கைது செய்தனர். அவர்களிடமிருந்த போதை ஊசிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

News January 20, 2026

உடுமலை அருகே பஸ் -லாரி மோதி விபத்து!

image

உடுமலை ராகல்பாவி அருகே மூணாறிலிருந்து கோவை நோக்கிச் அரசுப் பேருந்து சென்றது. அப்போது முன்னால் சென்ற லாரி திடீரென வலது புறம் திரும்பிய போது லாரி மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தின் முன்பக்கம் பலத்த சேதமடைந்து 13 பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடுமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்றனர். இது குறித்து உடுமலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 20, 2026

அறிவித்தார் திருப்பூர் கலெக்டர்! முக்கிய தகவல்

image

காங்கயம் தாலுகா, பாப்பினி கிராமத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா பெற்ற 108 நபர்கள், நிபந்தனைப்படி அங்கு வீடு கட்டி வசிக்கவில்லை என்பது ஆய்வில் தெரிந்தது. அவர்களை அடையாளம் காண முடியாததால், 15 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியர் அல்லது ஆதிதிராவிடர் நல அதிகாரியை அணுகத் தவறினால் பட்டாக்கள் ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!