News August 23, 2025
திருப்பூர் இரவு ரோந்து காவலர் விபரம்!

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 23.08.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம், தாராபுரம், உடுமலை, பல்லடம், அவிநாசி ஆகிய பகுதியிலுள்ள காவல் துறையின் இரவு ரோந்து பணி விபரம் மாவட்ட காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவிக்கு 108 ஐ அழைக்கவும்.
Similar News
News January 17, 2026
குண்டடத்தில் மனைவி கொலை: கணவர் அதிரடி கைது

குண்டடம் அருகே பூங்கொடி என்ற பெண் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து குண்டடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், அவரது கணவர் அங்கமுத்து குருசாமி மனைவியைக் கட்டையால் தாக்கி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, நேற்று அவரை முதல் குற்றவாளியாகக் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
News January 17, 2026
திருப்பூரில் பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது

திருப்பூர் தென்னம்பாளையத்தில் ஒரு வீட்டில் தெற்கு போலீசார் சோதனை நடத்தினார்கள். அங்கு பணம் வைத்து சூதாடிய 5 பேரை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1,300-ஐ பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரன்(50), சுரேந்தர்(21), வெங்கடாசலம்(44), ராமசாமி(52), செந்தில்(52) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
News January 16, 2026
திருப்பூர்: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <


