News August 22, 2024
திருப்பூர் இன்றைய தலைப்பு செய்திகள்

➤உடுமலை அருகே மர்மவிலங்கு நடமாட்டம்
➤உடுமலை பஞ்சலிங்க அருவியில் குளிக்க அனுமதி
➤திருப்பூரில் வக்கீல்கள் நாளை புறக்கணிப்பு போராட்டம்
➤எரகாம்பட்டி மாரியம்மன் கோவில் ஆண்டு விழா
➤திருப்பூரைச் சேர்ந்தவர் வழக்கு – உயர்நீதிமன்றம் அதிரடி
➤பல்லடம் அருகே கிராவல் மண் கடத்த முயன்ற லாரிகள் சிறை பிடிப்பு
➤நத்தக்காடையூரில் குடிநீர் திட்ட பணி – அதிகாரிகள் ஆய்வு
Similar News
News November 13, 2025
திருப்பூரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு!

திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சேகரிக்கப்படும் குப்பைகள், திருப்பூர் இடுவாய் அருகே உள்ள காலி இடத்தில் கொட்டப்படுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு அப்பகுதிப் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரக்கூடிய நிலையில், பால் கொடுக்கும் ஊருக்கு பால்டாயில் கொடுப்பதா? என்ற போஸ்டர்கள் கிராம மக்கள் சார்பில், திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.
News November 13, 2025
திருப்பூரில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்!

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (நவ.13) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, அவிநாசிலிங்கம்பாளையம், அணைப்புதூர், பழங்கரை, தேவம்பாளையம், நல்லி கவுண்டம்பாளையம், கைகாட்டிப்புதூர் ஒரு பகுதி, குளத்துப்பாளையம், பொல்லிக்காளிபாளையம், முத்தணம்பாளையம், அலகுமலை, பொருந்தொழுவு, நாச்சிபாளையம், கைகாட்டி, தொங்குட்டிபாளையம், கண்டியன் கோவில், முதியாநெரிச்சல், ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News November 13, 2025
காங்கயம் அருகே விபத்து: சம்பவ இடத்திலேயே பலி!

காங்கயத்தை அடுத்த துண்டுகாடு, நீலக்காட்டு தோட்டத்தை சேர்ந்தவர் ராமசாமி (வயது 85). நேற்று இவர், வீட்டின் அருகே காங்கயம்-தாராபுரம் சாலையில் உள்ள கடைக்கு வந்தார். அப்போது அந்த வழியாக சென்ற லாரி, ராமசாமி மீது மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ராமசாமி இறந்தார். இது குறித்து தர்மபுரியை சேர்ந்த லாரி டிரைவர் சக்திவேல் (25) மீது காங்கேயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


