News June 17, 2024

திருப்பூர் அருகே இஸ்லாமியர்கள் ஊர்வலம்

image

உடுமலையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. பின்னர் குட்டைதிடல் அருகில் உள்ள ஜாமியா பள்ளிவாசலிலிருந்து ஊர்வலம் தளி ரோடு பொள்ளாச்சி ரோடு வழியாக இறைவனை வேண்டியவாறு சென்ற ஊர்வலம் கொல்லப்பட்டறை அருகில் உள்ள பூர்வீக பள்ளிவாசலில் நிறைவடைந்தது. அதை தொடர்ந்து அனைவரும் பிரார்த்தனை செய்தனர். பக்ரீத் ஊர்வலத்தை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Similar News

News January 23, 2026

மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

image

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் எம்.பி. கே.சுப்பராயன் இக்கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் அதன் தற்போதைய நிலை குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

News January 23, 2026

திருப்பூர்: டிகிரி போதும்.. ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை

image

இந்தியாவில் முக்கிய வங்கிகளில் ஒன்றான சென்ட்ரல் வங்கியில் முக்கிய பதவிகளில் உள்ள 350 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்து இருக்க வேண்டும். தேர்வாகும் நபர்களுக்கு ரூ.48,480 முதல் ரூ.1,05,280 வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> செய்ய வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்., 3-ம் தேதி ஆகும்.

News January 23, 2026

திருப்பூரில் இலவச நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி!

image

திருப்பூரில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி விரைவில் வழங்கப்படுகிறது. 25 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், நாட்டுக்கோழி வளர்ப்பு தொடர்பான அடிப்படை பயிற்சி, உணவளிப்பு, சுகாதார மேலாண்மை தொடர்பான அனைத்து பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இதற்கு 10வது முடித்திருந்தால் போதுமானது. இதற்கு விண்ணப்பிக்க இந்த லிங்கை <>க்ளிக் <<>>செய்யவும். இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!