News October 12, 2025

திருப்பூருக்கு தீபாவளி சிறப்பு ரயில்

image

போத்தனுார் – சென்னை (எண்:06044) இடையே தீபாவளி சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும், 19ம் தேதி இரவு, 11:20 க்கு போத்தனுாரில் புறப்படும் ரயில், நள்ளிரவு, 12:10 க்கு திருப்பூர் வரும்;மறுநாள் காலை, 8:45க்கு சென்னை சென்று சேரும்.மறுமார்க்கமாக, 22ம் தேதி மதியம் 12:15 க்கு புறப்படும் சிறப்பு ரயில் இரவு, 10:00 மணிக்கு போத்தனுார் வந்தடையும். இரவு, 8:00 மணிக்கு திருப்பூரை கடக்கும்.

Similar News

News December 10, 2025

திருப்பூரில் மூதாட்டிக்கு நேர்ந்த விபரீதம்!

image

திருப்பூர் தேவாங்குபுரம் பகுதியை சேர்ந்தவர் நித்யகல்யாணி(74). இவர் நேற்று ரவுண்டானா பகுதியில் கடைக்கு காய்கறி வாங்க வந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் நித்யகல்யாணி அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர். இது குறித்து வடக்கு குற்றப் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை, கண்காணிப்பு கேமரா காட்சிகள் அடிப்படையில் தேடி வருகின்றனர்.

News December 10, 2025

திருப்பூரில் திருநங்கை கொலை! இருவர் அதிரடி கைது!

image

திருப்பூர் காலேஜ் ரோட்டைச் சேர்ந்தவர் திருநங்கை ஸ்ரேயா. இவருக்கும் அருகில் வசித்து வந்த சுப்பிரமணியன் என்பவரது குடும்பத்திற்கும் தகராறு இருந்து வந்துள்ளது‌. நேற்று முன்தினம் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில், சுப்பிரமணியம் தள்ளிவிட்டதில் ஸ்ரேயா தலையில் காயம் ஏற்பட்டது. இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஸ்ரேயா உயிரிழந்தார். இதனால் சுப்பிரமணியன், அவரது மகன் சரவணனை போலீசார் கைது செய்தனர்.

News December 10, 2025

திருப்பூர்: ரோடு சரியில்லையா? உடனே இத பண்ணுங்க!

image

திருப்பூர் மக்களே, உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து <>“நம்ம சாலை”<<>> செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்

error: Content is protected !!