News June 18, 2024

திருப்பூரில் வாலிபர் வெட்டி படுகொலை

image

திருப்பூர் கோல்டன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (30). இவர் தனியார் பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், இன்று மாலை கோல்டன் நகர் பகுதியில் உள்ள பேக்கரியில் டீ அருந்தி கொண்டிருந்த போது இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் இவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News January 25, 2026

திருப்பூர்: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

திருப்பூர் மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை <>இந்த லிங்கில்<<>> மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசென்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

News January 25, 2026

திருப்பூரில் பொதுமக்கள் அதிர்ச்சி

image

திருப்பூர் மாநகரில், தாராபுரம் சாலையில் இருந்து காங்கேயம் சாலை செல்லக்கூடிய முக்கிய போக்குவரத்து வழித்தடம். இன்று காலை அடைக்கப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை பணிகள் மேற்கொள்ளப்படுவதன் காரணமாக, தற்காலிகமாக சாலை அடைக்கப்படுவதாக திடீரென தடுப்புகள் அமைக்கப்பட்டதால், விடுமுறை நாளான இன்று வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

News January 25, 2026

திருப்பூர்: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

image

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், திருப்பூர் மாவட்ட மக்கள் 0421-2482816 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!

error: Content is protected !!