News August 6, 2024

திருப்பூரில் ரூ.100 கோடி: கோவில் நிலம் மீட்பு

image

திருப்பூர் தெற்கு வட்டம் அலகுமலை அழகாபுரி அம்மன் கோவிலுக்கு பாத்தியப்பட்ட 16.84 ஏக்கர் மற்றும் முத்துக்குமார பாலதண்டாயுதபாணி கோயிலுக்கு பாத்தியப்பட்ட இருவேறு இடங்களில் மொத்தமாக ரூ.100 கோடி மதிப்பிலான 4.71 என 21.59 ஏக்கர் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் நிலத்தை அதிகாரிகள் மீட்டனர்.

Similar News

News January 23, 2026

திருப்பூரில் வசமாக சிக்கிய கல்லூரி மாணவன்!

image

திருப்பூர் அனைபுதூரை சேர்ந்தவர் சாமிநாதன். வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் கோவிலுக்கு சென்றிருந்தார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் கதவு திறக்கப்பட்டு 16 பவுன் நகை 1 லட்சம் ரூபாய் திருடு போனது தெரியவந்தது. புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், சாமிநாதன் வீட்டிற்கு எதிர்ப்புறத்தில் வசிக்கும் கல்லூரி மாணவர் சஞ்சய் திருட்டில் ஈடுபட்டது பெரிய வந்ததை தொடர்ந்து, கைது செய்யப்பட்டார்.

News January 23, 2026

திருப்பூரில் அதிரடி கைது!

image

திருப்பூர் அனுப்பர்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 15 வேலம்பாளையம் சாலையில், சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்ட போலீசார், சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட முருகானந்தம் என்பவரை கைது செய்து, 15 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.

News January 23, 2026

திருப்பூர்: இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

image

திருப்பூர் மாவட்டம், காங்கேயம், தாராபுரம், உடுமலை, பல்லடம் மற்றும் அவினாசி பகுதிகளில் இன்று (22.01.2026) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் தொடர்பு எண்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வெளியிடப்பட்டது. அவசர உதவிக்கு 108 எண்ணை அழைக்கவும். காவல்துறை மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கையை அறிவித்துள்ளது.

error: Content is protected !!