News August 21, 2024
திருப்பூரில் கொட்டித்தீர்த்த மழை

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று மதியம் முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டதோடு இடியுடன் கூடிய கனமழை பெய்தது. திருப்பூர் வடக்கு தாலுக்கா பகுதியில் 41 மில்லி மீட்டர் மழையும், கலெக்டர் அலுவலகப் பகுதியில் 30 மி.மீட்டர் மழையும், தெற்கு பகுதியில் 21 மில்லி மீட்டரும், பல்லடம் சாலையில் 38 மில்லி மீட்டரும், பல்லடத்தில் 6 மில்லி மீட்டர் என மாவட்டம் அல்லது 211.40 மி.மீட்டர் மழை பொழிவு பதிவாகியுள்ளது.
Similar News
News January 21, 2026
JUSTIN: திருப்பூர் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

திருப்பூர் மாவட்டத்திட்குட்பட்ட 265 ஊராட்சிகளிலும் குடியரசு தினத்தை முன்னிட்டு, வரும் 26ம் தேதி கிராம சபா கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் மனிஷ் தெரிவித்துள்ளார். இது காலை 11 மணிமுதல் நடைபெறும் எனவும், பொதுமக்கள் கலந்து கொண்டு, அந்தந்த பகுதிகளில் உள்ள பிரச்சனைகள் அனைத்தையும் தெரிவிக்கலாம். மற்றும் ஊராட்சியின் நிதி அறிக்கையும் மக்கள் பார்வைக்கு வைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
News January 21, 2026
திருப்பூர்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

திருப்பூர் மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News January 21, 2026
திருப்பூர்: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

வாட்ஸ்அப் மூலமாக கேஸ் சிலிண்டர் புக் செய்வது மிகவும் எளிதான மற்றும் விரைவான வழியாகும். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களில் உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!


