News August 20, 2024
திருப்பூரில் இன்று மின்தடை

திருப்பூர் மாவட்டம் உடுமலை, கோமங்கலம் புதூர் துணைமின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக இன்று (ஆக.20) காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும். அதேபோல் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை பல்லடம் நாரணாபுரம் துணைமின் நிலையம், ஊதியூர் மற்றும் ராசாத்தாவலசு துணை மின் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 24, 2026
திருப்பூர் அருகே அதிரடி கைது!

திருப்பூர், தாராபுரம் பகுதிக்கு, மதுரையிலிருந்து இருசக்கர வாகனத்தில், கஞ்சாவை இரண்டு இளைஞர்கள் கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவல் அடிப்படையில், தாராபுரம் போலீசார், அப்பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்ததில் அவர்களிடம் 430 கிராம் கஞ்சா இருந்தது தெரிந்தது. அதை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
News January 24, 2026
திருப்பூர்: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் காப்பீடு!

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்
News January 24, 2026
திருப்பூர்: PHONE வைத்திருப்போர் கவனத்திற்கு!

திருப்பூர் மக்களே உங்கள் செல்போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம்.<


