News April 1, 2025
திருப்பரங்குன்றத்திற்கு பக்தர்கள் செல்ல தடை

திருப்பரங்குன்றத்தில் ஏப்ரல் 14ல் திருக்குட நன்னீராட்டு விழா நடக்க உள்ள நிலையில், ஏப்ரல்
7 ஆம் தேதி முதல் மூலஸ்தானம், அர்த்த மண்டபம், மகா மண்டபத்திற்கு பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை எனவும், கோவிலில் ஏப்ரல் 7 ஆம் தேதி பாலாலய யாகசாலை பூஜை தொடங்கி குடமுழுக்கு பணியும் , கோயிலின் மூலஸ்தானம் அர்த்தமண்டபம் மகா மண்டபத்தில் மராமத்து பணி நடக்க உள்ளது எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Similar News
News January 21, 2026
மதுரை: காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை

அவனியாபுரத்தை சேர்ந்த முருகேசன் மகள் ஆனந்தி(26). அதே பகுதியை சேர்ந்த ராஜரத்தினம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ராஜரத்தினம் தென்காசியில் டாஸ்மாக் கடையில் வேலை பார்த்து வருகிறார். 2 குழந்தைகளுடன் தனித்து இருந்த ஆனந்தி மன அழுத்தத்தில் விஷம் குடித்து நேற்று மயங்கி விழ மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டவர் அங்கு பலியானார். சிலைமான் போலீசார் விசாரிக்கின்றனர்.

மதுரை சித்திரை திருவிழாவின் முதல் நிகழ்ச்சி.!

அழகர் கோவில் கள்ளழகர் திருக்கோவிலில் இந்த ஆண்டு சித்திரை பெருந்திருவிழாவின் முதல் நிகழ்ச்சியான ஆயிரம் பொன் சப்பர முகூர்த்தம் வரும் ஜன. 23 தேதி நடக்கிறது. அதன்படி காலை 9:30 முதல் 10:30 மணிக்குள் ஸ்தலாங்கம் பார்க்கும் நிகழ்ச்சியும் மதியம் 1:30 முதல் 2:15 மணிக்குள் ஆயிரம் பொன் சப்பரம் முகூர்த்த நிகழ்ச்சி தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் நடைபெற உள்ளது, என கோவில் நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது.