News December 15, 2025
திருப்பத்தூர்: EB பில் நினைத்து கவலையா??

திருப்பத்தூர் மக்களே உங்க கரண்ட் கம்மியா பயன்படுத்துன மாதிரியும், கரண்ட் பில் கூட வர மாதிரியும் இருக்கா?இதை தெரிஞ்சுக்க வழி இருக்கு! <
Similar News
News January 25, 2026
திருப்பத்தூரில் கொலை வெறி தாக்குதல்!

வாணியம்பாடி அடுத்த கொத்தக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவரை முன்விரோதம் காரணமாக நேற்று (ஜன.24) இரவு மூன்று இளைஞர்கள் வீடு புகுந்து தாக்கி, வீட்டில் இருந்த பொருட்களை சேதப்படுத்தி சென்றனர். இதில் காயமடைந்த ஏழுமலை, வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, வாணியம்பாடி கிராமிய போலீசார் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
News January 25, 2026
திருப்பத்தூர்: கை குழந்தையுடன் பெண் கதறல்!

பொன்னேரியை சேர்ந்தவர் அகிலா. இவரது கணவர் தியாகராஜன். கணவன் மனைவி இடையே பிரச்சனை காரணமாக அகிலாவை அவரது கணவர் வீட்டில் சேர்க்காமல் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கணவனுடன் சேர்த்து வைக்க கோரி திருப்பத்தூர் கோர்ட்டில் அகிலா வழக்கு தொடுத்துள்ளார். இந்நிலையில் கணவன் வீட்டின் முன் கை குழந்தையுடன் தனது 35 பவுன் நகையை மீட்டு தரக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
News January 25, 2026
திருப்பத்தூரில் பெண் தலை நசுங்கி பலி!

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த பெத்தகல்லுப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் கலைவாணி. இவர் நேற்று (ஜன.24) அதே பகுதியில் உள்ள சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மேல்மருவத்தூருக்கு பக்தர்களை ஏற்றிச்சென்ற பேருந்து, கலைவாணி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் கலைவாணி சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.


