News October 15, 2024
திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் உதவி எண்கள் அறிவிப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் வடக்கு கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை அடுத்து திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாவட்ட மக்களை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார் .மேலும் மாவட்ட காவல் துறை சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு 04179-221104
9442992526
04179-221103
9159959919 மேலும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Similar News
News July 8, 2025
திருப்பத்தூரில் 467 குவிந்த மனுக்கள்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று காலை 10 மணி முதல் மாலை 1 மணி வரை நடைபெற்ற மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டத்தில் பல்வேறு துறைகள் சார்பில் 467 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் க. சிவசௌந்தரவல்லி பெற்றுக் கொண்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தீர்வு காண ஆணை பிறப்பித்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் மற்றும் முதல் நிலை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
News July 7, 2025
திருப்பத்தூர்: பட்டா விவரம் அறிய எளிய டிப்ஸ்!

திருப்பத்தூர் மக்களே நிலங்களின் பட்டா விவரங்களை அறிய உங்கள் போனில் லொக்கேஷனை ஆன் செய்துவிட்டு AAVOT.COM என்ற இணையதளம் செல்லுங்கள். அதில் இருக்கும், SEARCH BOX-ல் NILAM என SEARCH செய்தால் கீழே Check Land என இருக்கும். அதை க்ளிக் செய்து, நீங்கள் இருக்கும் இடத்தின் விவரங்களை அறியலாம். (அ) TamilNilam என்ற செல்போன் செயலி மூலமாகவும் அறியலாம். தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க கண்டிப்பாக உதவும்
News July 7, 2025
காவல்துறையின் பொது மக்களுக்கு விழிப்புணர்வு பதிவு

திருப்பத்தூர், கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா ஆணைக்கிணங்க திருப்பத்தூர் மாவட்ட பொதுமக்கள் மற்றும் முகநூல் வாசிகளுக்கு விழிப்புணர்வு செய்தி பதிவிடப்பட்டது. அதன்படி, Cyber Scam: உங்கள் நண்பரின் முகநூல் பக்கத்திலிருந்து அவசர தேவை எனக்கூறி பணம் கேட்டு செய்தி வந்தால் நம்ப வேண்டாம். அவ்வாறு தங்களுக்கு ஏதேனும் செய்தி வந்தால் திருப்பத்தூர் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையை தொடர்புகொள்ள தெரிவித்துள்ளது.