News April 24, 2025

திருப்பத்தூர் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் விவரங்களை மாவட்ட காவல்துறையினர் தொலைபேசி எண்ணுடன் அவர்களின் பெயர்கள் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் மற்றும் குற்றங்கள் குறித்து பொது மக்கள் மேற்கண்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்.

Similar News

News November 8, 2025

திருப்பத்தூர் பெண்களே நிலம் வாங்கினால் ரூ.5 லட்சம் மானியம்!

image

பெண்களை நில உடைமையாளர்களாக மாற்றும் வகையில் தாட்கோ மூலமாக நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்கள் விவசாய நிலம் வாங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை மானியம் பெறலாம். அதேபோல், முத்திரைத்தாள், பதிவு கட்டணத்தில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படும். இதில் பயனடைய விரும்பும் பெண்கள் <>இங்கு க்ளிக் <<>>செய்து மேலும் விவரங்களை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News November 8, 2025

திருப்பத்தூர்: ரயிலில் அடிபட்டு கொடூர பலி!

image

வேலுார் மாவட்டம், குடியாத்தம் அருகே ஏரிப்பட்டறை சேர்ந்தவர் கணேசன்(வயது 65) கூலி தொழிலாளியான இவர் நேற்று (நவ.7) இரவு ஜோலார்பேட்டை அடுத்த வளத்துார் மேலாளத்துார் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

News November 8, 2025

திருப்பத்தூரில் காவலாளியை அடித்துக் கொலை!

image

திருப்பத்தூரில் உள்ள கோல்டன் சூப்பர் மார்க்கெட்டில் பணியாற்றி வரும் பாச்சல் லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த அந்தோணி என்கின்ற அலிஜான் (65) என்பவரை மற்றொரு காவலாளி கார்த்திக் என்பவர் இன்று (நவ.8) காலை அடித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதுகுறித்து திருப்பத்தூர் நகர காவல் துறையினர் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!