News August 20, 2024

திருப்பத்தூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், வெளியே செல்லும் பொதுமக்கள், குடை மற்றும் ரெயின் கோர்ட் எடுத்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால், வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை பெய்யுமா?

Similar News

News January 15, 2026

திருப்பத்தூரில் பகுஜன் சமாஜ் கட்சியினர் புகார்

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று (ஜன.14) நடைபெற்ற மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சியினரை தொடர்ந்து இழிவுபடுத்தி பேசி வரும் சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அக்கட்சியை சேர்ந்த அஸ்லம் பாஷா புகார் மனு அளித்தார். உடன் ஆல்பர்ட், ரஞ்சித் குமார், ராஜேந்திரன் ஆகியோர் சென்று மனு அளித்தனர்.

News January 15, 2026

திருப்பத்தூர் காவல்துறையினர் விழிப்புணர்வு

image

வாணியம்பாடி அடுத்த சின்னகல்லுபள்ளி பகுதியில் உள்ள சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று (ஜன.14) வாணியம்பாடி கிராமிய காவல் துறையினர் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்து பிரச்சார துண்டுகள் வழங்கி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது.

News January 15, 2026

திருப்பத்தூர்: ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள்

image

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் இன்று இரவு ஜனவரி 14 ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இரவு பாதுகாப்பற்ற முறையில் இருப்பதாக உணரும் பொதுமக்கள் உடனடியாக கால் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். இரவு நேரங்களில் வேலை செய்வோர் பயன்படுத்திக் கொள்ளலாம். தேவைப்படுவோர் காவல்துறை அதிகாரிகளின் நம்பரை போனில் பதிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

error: Content is protected !!