News October 18, 2025

திருப்பத்தூர் மக்களே மழை காலத்தில் கரண்ட் கட்டா..?

image

திருப்பத்தூர் மக்களே தற்போது மழை காலம் தொடங்கியுள்ளதால் பல்வேறு பகுதியில் மின் விநியோகத்தில் பிரச்சனை எழும். அதனை சரி செய்ய லைன்மேனை நேரில் தேடி அலைய வேண்டாம். TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் உடனடியாக லைன் மேன் வருவார். இதை உடனே எல்லோருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News November 14, 2025

திருப்பத்தூர்: இரவு ரோந்து அதிகாரிகள் பட்டியல்!

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் துறையின் நேற்று (நவ.13) இரவு ரோந்து பணிக்கான அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டது. அதன்படி மாவட்ட ரோந்து கண்காணிப்பு அதிகாரிகள்: DSP/AMB மைக் 22 குமார் (6382260087), துணை பிரிவுகள்: திருப்பத்தூர் – இன்ஸ்பெக்டர் அருண்குமார், வாணியம்பாடி – இன்ஸ்பெக்டர் உளகநாதன், ஆம்பூர் – இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் அனைத்து நிலையங்களும் ரோந்து பணியில் ஈடுபடுகின்றன. உதவிக்கு அழைக்கவும்!

News November 13, 2025

திருப்பத்தூர்: 647 பள்ளிகள் பயனடைகிறது – ஆட்சியர் அறிவிப்பு

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் தமிழக முதல்வர் காலை உணவு திட்டத்தின் கீழ் 647 பள்ளிகளில் பயிலும் 42,618 மாணவ, மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. என மாவட்ட ஆட்சியர் சிவசௌந்திரவள்ளி இன்று (நவ-13) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் கட்டாயம் உயர்கல்வி பயின்றிட வேண்டும் என்ற எண்ணத்தில் ஏழை, எளிய மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் செயல்பட்டு வருகிறது.

News November 13, 2025

திருப்பத்தூர் காவல்துறையின் எச்சரிக்கை!

image

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையினர், இன்று (நவ.13) விழிப்புணர்வு பதிவு ஒன்றை இணையத்தில் வெளியீட்டியுள்ளனர். அதன்படி, ‘போலி கணக்குகள் மற்றும் தொலைபேசியில் வரும் குறுஞ்செய்திகள் பரிசு பொருட்கள் விழுந்துள்ளதாக வரும் போலியான செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம். இது புதிய வகை திருட்டு கும்பலின் நூதன மோசடி முறை எனவே பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க கேட்டுக்கொள்கிறது’.

error: Content is protected !!