News October 18, 2025
திருப்பத்தூர் மக்களே உஷாரா இருங்க

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், இன்ஸ்டாகிராம்/ முகநூல் / வாட்ஸ் அப்பில் வரும் பட்டாசு விற்பனை விளம்பரங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நம்பி ஆர்டர் செய்து முன்பணம் மற்றும் டெலிவரிக்காக பணம் அனுப்பி ஏமாற வேண்டாம். தவறி ஏமாற்றப்பட்டால் 1930 என்ற இலவச எண்ணை அழைக்கவும், அல்லது www.cybercrime.gov.in என்ற வலைத்தள முகவரியில் புகார் அளிக்கலாம். *தெரிந்த நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
Similar News
News November 9, 2025
திருப்பத்தூர்: 8th பாஸ் போதும்; ரூ.58,000 சம்பளத்தில் அரசு வேலை

தமிழ்நாடு நெடுஞ்சாலை துறையில் மாவட்ட வாரியாக அலுவலக உதவியாளர் மற்றும் அலுவலக காவலர் போன்ற காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 8ம் வகுப்பு தகுதிபெற்று, 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாக இருக்கவேண்டும். மாத சம்பளமாக ரூ.15,700 – ரூ.58,100 வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள்<
News November 9, 2025
திருப்பத்தூரில் காவலர் தேர்வர்களுக்கான தேர்வு மையங்கள்

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் 2025 ஆம் ஆண்டிற்கான காவலர்களுக்கான தேர்வு 1.பிரியதர்ஷினி பொறியியல் கல்லூரி, 2.இஸ்லாமிய ஆண்கள் கல்லூரி, 3.தூய நெஞ்சக் கல்லூரி ஆகிய 03 தேர்வு மையங்களில் 3258 ஆண்களுக்கும், 4.மருதர் கேசரி ஜெயின் காலேஜ் 965 பெண்கள் என மொத்தம் 4223 விண்ணப்பதாரர்களுக்கும் திருப்பத்தூரில் தேர்வுகள் நாளை திருப்பத்தூர் எஸ் பி சியாமளா தேவி மேற்பார்வையில் (நவ 09) நடைபெற உள்ளது
News November 8, 2025
திருப்பத்தூர் பெண்களே நிலம் வாங்கினால் ரூ.5 லட்சம் மானியம்!

பெண்களை நில உடைமையாளர்களாக மாற்றும் வகையில் தாட்கோ மூலமாக நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்கள் விவசாய நிலம் வாங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை மானியம் பெறலாம். அதேபோல், முத்திரைத்தாள், பதிவு கட்டணத்தில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படும். இதில் பயனடைய விரும்பும் பெண்கள் <


