News September 30, 2025
திருப்பத்தூர்: பைக் மோதி முதியவர் படுகாயம்

ஜோலார்பேட்டை அருகே ரெட்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணையன் இவர் நேற்று (செப் 29) மேட்டு சக்கரகுப்பம் பகுதியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த அன்பழகன் என்பவர் மோட்டார் சைக்கிளில் திருப்பத்தூர் நோக்கி செல்லும் போது முதியவர் மீது மோதியதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். இதில் முதியவருக்கு கால் முறிவு ஏற்பட்டது இது குறித்து ஜோலார்பேட்டை காவல்துறை விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News November 12, 2025
திருப்பத்தூர் மாவட்ட பெண்களுக்கு அரிய வாய்ப்பு

திருப்பத்தூர் மாவட்டம் சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 21 முதல் 40 வயது வரி உள்ள பெண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். <
News November 12, 2025
ஜோலார்பேட்டையில் 5 கிலோ கஞ்சா கடத்திய வாலிபர் கைது

திரிபுரா மாநிலம் முக்தபா தக்சியா சேர்ந்த ரஞ்சித் டெபர்மா (வயது30) இவர் திரிபுரா மாநிலத்திலிருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு எக்ஸ்பிரஸ் ரயிலில் 5 கிலோ கஞ்சா கடத்தி விற்பனை செய்ய ஜோலார்பேட்டை ஜங்ஷன் பஸ் நிலையம் வரும் போது ஜோலார்பேட்டை போலிசார் இன்று (நவ.11)ரோந்து பணியின் போது சந்தேகத்தின் பேரில் சோதனை செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News November 12, 2025
ஓடும் ரெயிலில் தவறி விழந்து கை துண்டாகி நிலையில் வாலிபர்

ஜோலார்பேட்டை அடுத்த லத்தேரி ரெயில் நிலையம் அருகே ஏதோ ஒரு ரெயிலில் பயணம் செய்தவர் சுமார் 40 வயது தக்க வாலிபர் படிக்கட்டில் இருந்து ஓடும் ரெயிலில் தவறி விழுந்து அடிபட்டு இடது கை துண்டாகி நிலையில் அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு 108 மூலம் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜோலார்பேட்டை போலிசார் அடிப்பட்டவர் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.


