News April 24, 2025
திருப்பத்தூர்: கேக் வெட்டிய ஆசிரியர்கள் மீது அதிரடி

திருப்பத்தூர், சின்னவரிகம் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றி வரும் சுதாகரன் மற்றும் அவரது மனைவி இருவரும் ஏப்.,22 அன்று தங்களது திருமண நாளை முன்னிட்டு பள்ளியில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இதுகுறித்த புகைப்படம் வைரலான நிலையில், மாவட்ட கல்வி அதிகாரி இருவரையும் முறையே உதயேந்திரம் மற்றும் வெங்கிளி பள்ளிக்கு அதிரடியாக இடம் மாற்றியுள்ளார். *உங்களுக்கு தெரிந்த ஆசிரியர்களுக்கு பகிரவும்*
Similar News
News November 12, 2025
திருப்பத்தூர் காவல்துறையின் அறிவுறுத்தல்!

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையினர் தங்களது சமூக வலைதளம் பக்கத்தில் இன்று (நவ.12) விழிப்புணர்வு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, பொதுமக்கள் தங்களது வாகனங்களை இயக்கும்போது முன்னதாகவே வாகனத்தில் சாவி போடும் முன் சீட் பெல்ட் அணிவோம்! பாதுகாப்பான பயணம் மேற்கொள்வோம்!. என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
News November 12, 2025
பேவர் பிளாக் சாலை அமைக்க பூமி பூஜை செய்த எம்.எல்.ஏ.

திருப்பத்தூர் மாவட்டம். கந்திலி ஒன்றியத்திற்குட்பட்ட உடையாமுத்தூர் ஊராட்சி, மாரியம்மன் கோயில் பகுதியில், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் 2.50 இலட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் அமைக்க இன்று (நவ.12) திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி அவர்கள் பூமி பூஜை செய்து பணியினை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உள்ளாட்சி பிரநிதிகள் பலர் உடனிருந்தனர்.
News November 12, 2025
திருப்பத்தூர்: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா ?

திருப்பத்தூர் மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது இங்கே <


