News September 29, 2025
திருப்பத்தூர்: உங்களுடன் ஸ்டாலின் முகாம் விபரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளை(30.09.2025) ஜோலார்பேட்டை, ஆம்பூர், திருப்பத்தூர், அலங்கயம், பாச்சல் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. மகளிர் உரிமை தொகை, முதியோர் ஓய்வூதியம் போன்ற அரசின் சேவைகளில் குறை இருந்தால் இந்த முகாமில் கலந்து கொண்டு மனு அளித்து பயன்பெறலாம்.
Similar News
News November 7, 2025
வாணியம்பாடியில் பாலாறு பெருவெள்ள நினைவு சதுக்கம்!

வாணியம்பாடி நகரப் பகுதியில் 1903 ஆம் ஆண்டில், பாலாற்றில் பெருவெள்ளம் ஏற்பட்டு நகர பகுதியில் வசித்த 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், வருகின்ற (நவ.12) அன்று 122 ஆம் ஆண்டு அனுசரிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு, சந்தை மைதானம் அருகில் வெள்ளப்பெருக்கில் உயிர் நீத்தவர்களின் நினைவாக ‘பாலாறு பெருவெள்ள நினைவு சதுக்கம்’ அமைக்கும் பணி தனியார் அறக்கட்டளை சர்பாக நடைபெற்று வருகிறது.
News November 7, 2025
திருப்பத்தூர்: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் இங்கு <
News November 7, 2025
திருப்பத்தூர்: இனி எதற்கும் அலைய வேண்டாம்!

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink. இந்த இணையதளங்களில் விண்ணப்பியுங்க. ஷேர் பண்ணுங்க.


