News August 6, 2025
திருப்பத்தூரில் 2025 ஆண்டுக்கான தமிழ் செம்மல் விருது அறிவிப்பு!

திருப்பத்தூர் மாவட்டத்தில் 2025ஆம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருதுக்கு தமிழ் ஆர்வலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பப்படிவத்தினை தமிழ் www.tamilvalarchithuraitn.gov.in என்ற இணையத்திலோ அல்லது தருமபுரி தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ பெற்றுக்கொள்ளலாம். மேலும், தகவலுக்கு 0416 22561 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 14, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து அதிகாரிகள் பட்டியல்!

திருப்பத்தூர் மாவட்ட காவல் துறையின் நேற்று (நவ.13) இரவு ரோந்து பணிக்கான அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டது. அதன்படி மாவட்ட ரோந்து கண்காணிப்பு அதிகாரிகள்: DSP/AMB மைக் 22 குமார் (6382260087), துணை பிரிவுகள்: திருப்பத்தூர் – இன்ஸ்பெக்டர் அருண்குமார், வாணியம்பாடி – இன்ஸ்பெக்டர் உளகநாதன், ஆம்பூர் – இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் அனைத்து நிலையங்களும் ரோந்து பணியில் ஈடுபடுகின்றன. உதவிக்கு அழைக்கவும்!
News November 13, 2025
திருப்பத்தூர்: 647 பள்ளிகள் பயனடைகிறது – ஆட்சியர் அறிவிப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் தமிழக முதல்வர் காலை உணவு திட்டத்தின் கீழ் 647 பள்ளிகளில் பயிலும் 42,618 மாணவ, மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. என மாவட்ட ஆட்சியர் சிவசௌந்திரவள்ளி இன்று (நவ-13) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் கட்டாயம் உயர்கல்வி பயின்றிட வேண்டும் என்ற எண்ணத்தில் ஏழை, எளிய மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் செயல்பட்டு வருகிறது.
News November 13, 2025
திருப்பத்தூர் காவல்துறையின் எச்சரிக்கை!

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையினர், இன்று (நவ.13) விழிப்புணர்வு பதிவு ஒன்றை இணையத்தில் வெளியீட்டியுள்ளனர். அதன்படி, ‘போலி கணக்குகள் மற்றும் தொலைபேசியில் வரும் குறுஞ்செய்திகள் பரிசு பொருட்கள் விழுந்துள்ளதாக வரும் போலியான செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம். இது புதிய வகை திருட்டு கும்பலின் நூதன மோசடி முறை எனவே பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க கேட்டுக்கொள்கிறது’.


