News August 19, 2024

திருப்பத்தூரில் விழிப்புணர்வு பேரணி

image

உலக புகைப்பட தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.திருப்பத்தூர் மாவட்டம் புகைப்படம் மற்றும் வீடியோ கிராபர்கள் நல சங்கம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.சங்கத் தலைவர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் சங்கத் தலைவர் சரவணன் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக எம்.பி. சி.அண்ணாதுரை கலந்து கொண்டார்.திருப்பத்தூர் எம்.எல்.ஏ. நல்லதம்பி, நகர செயலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News January 16, 2026

திருப்பத்தூரில் இப்படி ஒரு இடங்களா?

image

திருப்பத்தூர் மக்களே! இந்த காணும் பொங்கலுக்கு வழக்கமான நெரிசலைத் தவிர்த்து, புதுமையாகத் திட்டமிடுங்கள். விண்வெளி அதிசயங்களை ரசிக்க காவலூர் வானாய்வகம், வரலாற்று நினைவலைகளுக்கு வாணியம்பாடி ‘பழைய நகரம்’, பிரமிக்க வைக்கும் மத்தூர்ப் பாலம், மற்றும் இயற்கையை ரசிக்க சொக்கநாதர் மலை ஆகிய இடங்களுக்கு உங்கள் குடும்பத்தோடு பயணியுங்கள். இந்த தகவலை ஷேர் பண்ணிட்டு உங்களுக்கு தெரிந்த இடங்களை கமெண்ட் பண்ணுங்க.

News January 16, 2026

திருப்பத்தூர்: கேஸ் சிலிண்டர் பயனாளர்கள் கவனத்திற்கு!

image

கேஸ் சிலிண்டருக்கு மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மேலும், UMANG என்ற App மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்.

News January 16, 2026

திருப்பத்தூர் காவல்துறை உதவி எண்கள்!

image

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (ஜன.16) மாவட்ட முழுவதும் முக்கியமான இடங்களில் பேனர்கள் மூலம் அவசர உதவி எண்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் SP அலுவலக உதவி எண்: 9442992526, காவல் கட்டுப்பாட்டு அறை எண்: 04179221104, தனி பிரிவு அலுவலகம்: 04179221103, போதை பொருள் தகவல்: 9159959919, மூத்த குடிமக்கள் உதவி எண்: 9486242428, SP அலுவலக முகாம் உதவி எண்: 04179221105.

error: Content is protected !!