News August 8, 2024
திருப்பத்தூரில் கடன் தொல்லையால் நிகழ்ந்த சோகம்

ஜோலார்பேட்டை அடுத்த கோடியூரை சேர்ந்த குகநாதன் தனியார் நிறுவனங்களில் கடன் பெற்றுள்ளார். கடன் தொல்லை அதிகரித்த நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் அவரது மனைவி கற்பகம், மகள் சுபிக்ஷாவை நிதி நிறுவன ஊழியர்கள் கடனை அடைக்க கூறி தொந்தரவு செய்ததால் இருவரும் வீட்டில் தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News February 19, 2026
ஜோலார்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மோதி பெண் போலிஸ் படுகாயம்

ஜோலார்பேட்டை அருகே சந்தைக்கோடியூர் சேர்ந்தவர் அமிதா பானு இவர் திருப்பத்தூர் மாவட்ட காவல் கணக்காளர் அலுவலகத்தில் பெண் போலீசாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று (பிப். 18) பொன்னேரி அருகே மொபட்டில் சென்று கொண்டிருக்கும் பொழுது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் அமிதா பானு படுகாயம் அடைந்தார். இதனால் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வை
News February 19, 2026
திருப்பத்தூர்: தவிக்க விட்ட மகன்; தூக்கில் தொங்கிய அப்பா!

ஜோலார்பேட்டை அருகே இடையம்பட்டி சேர்ந்தவர் காமராஜ். இவரது மனைவி கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில் தனது மகனுடன் வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் மகன் கோபி பிரிந்து சென்ற ஏக்கத்தில் காமராஜ் உற்று (பிப்.18) தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News February 19, 2026
திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று இரவு 12:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 -க்கு டயல் செய்யலாம். மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


