News August 21, 2024
திருத்தணி புதிய டி.எஸ்.பி. பொறுப்பேற்பு

திருத்தணி கோட்டத்திற்கான போலீஸ் சூப்பிரண்டாக இருந்த விக்னேஷ் தமிழ்மாறன், கடந்த வாரம் சென்னையில் உள்ள தமிழ்நாடு போலீஸ் உயர் பயிற்சியகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக, திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நில அபகரிப்பு பிரிவில் பணியாற்றி வந்த கந்தன், திருத்தணி டி.எஸ்.பி.யாக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
Similar News
News January 20, 2026
திருவள்ளூர்: ரூ.20 தந்தால் ரூ.2 லட்சம் கிடைக்கும்!

திருவள்ளூர் மக்களே.., உங்களுக்கு ரூ. 2 லட்சம் காப்பீடு வழங்க மத்திய அரசின் ‘பிரதான் மந்திரி சுரக்ஷா பீம யோஜனா’ திட்டம் உள்ளது. இதற்கு ஆண்டிற்கு ரூ.20 மட்டும் செலுத்தினால் போதும். இதற்கு யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். இதற்கான படிவத்தை <
News January 20, 2026
ஆவடி அருகே பரிதாப பலி!

திருவள்ளூர்: ஆவடி, கவரப்பாளையம், கங்கை அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கேசவன்(72). இவர், ஆவடியில் கைக்கடிகாரம் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார். இந்நிலையில், நேற்று(ஜன.19) காலை தனது பைக்கில் கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, சி.டி.எச் சாலையில், பின்னால் வந்த பைக் மோதியதில் தூக்கி வீசப்பட்டு, அந்த வழியாக சென்ற லாரியின் பின் பகுதியில் மோதி உயிரிழந்தார்.
News January 20, 2026
திருவள்ளூர்: குடிக்க வெந்நீர் தராததால் தற்கொலை!

ஆவடி அடுத்த திருநின்றவூர், சுதேசி நகர், பவானியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் நாராயணன்(46). கட்டடத் தொழிலாளியான இவர் மனைவி பவித்ரா(38), மகன் சபரிவாசன்(16) ஆகியோருடன் வாழ்ந்து வந்தார். வெரிகோஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று மனைவியிடம் குடிப்பதற்கு வெந்நீர் கேட்டுள்ளார். அதை அவர் தர மறுத்ததால் ஆத்திரமடைந்து, பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.


