News November 17, 2024
திருச்செந்தூர் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபாடு

கார்த்திகை மாத முதல் தேதியை முன்னிட்டு திருச்செந்தூர் கோயிலில் நேற்று(நவ.,16) காலை முதல் இரவு வரை பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக சபரிமலை ஐயப்ப பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக இருந்தது. தொடர்ந்து, இரவு கோயில் பிரகாரங்களில் பக்தர்கள் குடும்பத்தோடு கார்த்திகை தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர். இதற்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
Similar News
News March 12, 2026
தூத்துக்குடி: ரூ.2,40,000 சம்பளத்தில் வேலை ரெடி! உடனே APPLY

HPCL (இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்) நிறுவனத்தில் காலியாக உள்ள 730 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 18 – 45 வயதுகுட்பட்ட Diploma, Any Degree, B.E/B.Tech படித்தவர்கள் மார்ச் 25க்குள் இங்கு <
News March 12, 2026
தூத்துக்குடி: என்னை யாரும் கேள்வி கேட்பதில்லை – அமைச்சர்

முஸ்லீம்லீக் கட்சியில் 79 ம் ஆண்டு நிறுவன விழா மற்றும் சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ், திமுக, மதிமுக, விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய தூத்துக்குடி அமைச்சர் கீதா ஜீவன், சட்டமன்ற தொகுதியில் 5 வருடம் எங்கே சென்றீர்கள் என்று யாரும் கேட்கவில்லை. அந்த அளவுக்கு மக்கள் பணி செய்து வருகிறேன் என பேசினார்.
News March 12, 2026
தூத்துக்குடி: பட்டப் பகலில் பர்தா கொள்ளையர்கள் அட்டூழியம்

தூத்துக்குடி மாவட்டம், சிவகளை பகுதியில் நேற்று மதியம் பர்தா அணிந்த கொள்ளையர்கள் அப்பகுதியில் நடமாடி வந்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் அவர்களை விரட்டிய போது அவர்கள் அரிவாளை காட்டி மிரட்டி பர்தாவை தூக்கி வீசி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் அப்பகுதியில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


