News April 1, 2025

திருச்சுழி ஆய்வாளருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவு

image

திருச்சுழி காவல் நிலையத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் முத்து. இவர் ஆய்வாளராக இருக்கும்போது அருப்புக்கோட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த குற்றவியல் வழக்கில் ஆஜராக பலமுறை சம்மன் அனுப்பியும் தற்போது வரை ஆஜராகாமல் இருந்துள்ளார். இந்நிலையில் அருப்புக்கோட்டை சார்பு நீதிபதி ஆய்வாளர் முத்துவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளதாக நீதிமன்ற செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News July 10, 2025

உயர் கல்வி சேர்க்கைக்கான சிறப்பு குறைதீர் கூட்டம்

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களை கல்லூரி மற்றும் தொழிற்பயிற்சி கல்வியியல் சேர்ப்பது தொடர்பான நான்காம் கட்ட சிறப்பு குறைதீர் கூட்டம் வரும் வெள்ளி (11.07.25) அன்று நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.

News July 9, 2025

விருதுநகர்: பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு

image

இனி ஒரு பட்டாசு ஆலையில் கூட விபத்து நடக்கக்கூடாது என பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர், வெடி பொருட்கள் தலைமை கட்டுப்பாட்டாளர் தலைமையில் 2 குழுக்கள் அமைத்தும், பட்டாசு ஆலைகளை 10 நாள்களுக்குள் ஆய்வு செய்யவும் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. விருதுநகரில் உள்ள அனைத்து பட்டாசு ஆலைகளையும் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும் மாவட்ட ஆட்சியருக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு.

News July 9, 2025

எட்டூர்வட்டம் சுங்கச்சாவடியில் அரசு பஸ் செல்லத் தடை

image

தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டூர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குனேரி ஆகிய 4 சுங்கச் சாவடிகளில் வரும் 10ஆம் தேதி முதல் அரசுப் பேருந்துகளை அனுமதிக்க கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரூ.276 கோடி நிலுவைத் தொகையை செலுத்தாததால், மேற்கண்ட 4 சுங்கச்சாவடி நிறுவனங்கள் தொடந்த வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

error: Content is protected !!