News October 11, 2025
திருச்சி: 1150 கூடுதல் பேருந்துகள் இயக்கம்!

அரசு போக்குவரத்துக்கழகம், கும்பகோணம் லிட் சார்பில் தீபாவளியை முன்னிட்டு திருச்சியிலிருந்து கும்பகோணம் கழகத்திற்குட்பட்ட தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு வரும் அக்.16 அன்று 150 கூடுதல் பேருந்துகளும், அக்.17 & 19 ஆகிய நாட்களில் 900 கூடுதல் பேருந்துகளும் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
Similar News
News November 11, 2025
திருச்சி இளைஞர் கொலை: குற்றவாளிகளுக்கு மாவுக்கட்டு

திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் நேற்று இரவு ஒருவரை போலீசார் சுட்டுப் பிடித்த நிலையில், தலைமறைவாக இருந்த திருவானைக்காவலை சேர்ந்த நந்தகுமார், ரவுடி பிரபாகரன், கணேஷ் ஆகிய 3 பேர் போலீசாரிடம் இருந்து தப்ப முயன்றபோது தவறி விழுந்ததில், மூவருக்கும் கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மூவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
News November 11, 2025
திருச்சி: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000 நிதியுதவி

தமிழக அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களின் நலன் கருதி, ‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி’ எனும் அருமையான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கர்ப்பிணிகளுக்கு 3 தவணைகளாக ரூ.14,000 நிதியுதவியும், ரூ.4,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்படுகிறது. திட்டத்தில் பயன்பெற விரும்பும் கர்ப்பிணிகள் <
News November 11, 2025
திருச்சி: குடிநீர் விநியோகம் ரத்து

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட சிந்தாமணி, மலைக்கோட்டை, மரக்கடை, உறையூர், பாத்திமா நகர், புத்தூர், அண்ணா நகர், காஜா பேட்டை, ஜங்ஷன், கருமண்டபம், திருவெறும்பூர், சந்தோஷ் நகர் ஆகிய பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (நவ.12) ஒரு நாள் குடிநீர் வினியோகம் இருக்காது என்றும், நாளை மறுதினம் (நவ.13) வழக்கம் போல குடிநீர் விநியோகம் செய்யப்படும் என மாநகராட்சி ஆணையர் மதுபாலன் தெரிவித்துள்ளார்.


